இன்று தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு முடிவுகள் வெளியீடு!
இன்று அக்டோபர் 15ம் தேதி தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளதாக தேர்வுத் துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.

இந்தப் படிப்புகளின் முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வுகள் மே, ஜூன் மாதங்களில் நடத்தப்பட்டன. தேர்வெழுதிய மாணவர்கள் அவரவர் பயின்ற ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் அல்லது தனித்தேர்வர்கள் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
விடைத்தாள் நகல் பெற விரும்புவோர் www.dge.tn.gov.in (http://www.dge.tn.gov.in) இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, அவற்றை அக்.17 முதல் 22-ஆம் தேதி வரை நேரடியாக மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் சமர்ப்பிக்க வேண்டும். ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.275 கட்டணம் செலுத்த வேண்டும். விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே பின்னர் மறுமதிப்பீடு அல்லது மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்க முடியும்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
