அங்கன்வாடி ஆசிரியர்களுக்கு ஓய்வு பெறும் வயது 65 ஆக அதிகரிப்பு!!

தமிழகத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58லிருந்து 60ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல் தெலங்கானா மாநிலத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஓய்வு பெறும் வயது 58 லிருந்து 61ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல் தெலங்கானாவில் அங்கன்வாடிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், மினி அங்கன்வாடி ஆசிரியர்கள் அனைவருக்கும் ஓய்வு பெறும் வயது 60 லிருந்து 65 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து அங்கன்வாடி ஆசிரியர்கள் இதற்காக முதல்வர் சந்திரசேகரராவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அரசின் இந்த முடிவால் மாநிலம் முழுவதும் 70,000 அங்கன்வாடிகள் பலனடையும் எனத் தெரிவித்துள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சத்யவதி ரத்தோட் விடுத்த செய்திக்குறிப்பில் இந்தியாவிலேயே அங்கன்வாடி ஆசிரியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு தெலங்கானாவில் தான் அதிக சம்பளம் வழங்கப்படுகிறது.
அங்கன்வாடி ஆசிரியர்களுக்கு மாத ஊதியமாக ரூ.13,650, மினி அங்கன்வாடி ஆசிரியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு ரூ.7,800ம் வழங்கப்பட்டு வருகிறது . ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட்டுள்ளதால் தெலங்கானாவில் உள்ள அங்கன்வாடிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!