ஜன் தன் யோஜனாவில் புரட்சி!! 9 ஆண்டுகளில் ரூ2.03லட்சம் கோடி டெபாசிட்!!

 
ஜன் தன் யோஜனா

இந்தியா முழுவதும் 2015ல் 14.72 கோடி வங்கி கணக்குகள் மட்டுமே இருந்தன.  2023 ஆகஸ்ட்டில் இந்தியாவில்  வங்கி கணக்கு அது 50.09 கோடியாக உயர்ந்திருப்பது மோடியின் ஜன் தன் யோஜனா திட்டத்தின் மூலம் தான் என்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதராமன். 2014ல்  பிரதமர் மோடி ஜன் தன் யோஜனா திட்டம் தொடங்கப்படும்  சுதந்திர தின விழா உரையின்போது குறிப்பிட்டிருந்தார்.

ஜன் தன் யோஜனா

அதன்படி இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட்டில் வங்கி கணக்கு தொடங்க வழி செய்யப்பட்டிருந்தது.இந்த கணக்கை தொடங்க  ஆதார் கார்டு தவிர்த்து மற்ற எந்த ஆவணங்களும் தேவையில்லை என அறிவிக்கப்பட்டது. அதன்படி 2015ல் இருந்து வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டன. இந்த திட்டம்  மூலம் வங்கி சேவை கணக்கு, பணம் பரிமாற்றம், கடன் பெறுதல், டெபாசிட் செய்தல் என நிதி பரிவர்த்தனையில் புரட்சியை ஏற்படுத்தியதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம் வங்கி கணக்கு 2015-ல் 14.72 கோடியாக இருந்த நிலையில், 2023 ஆகஸ்ட் 16ல்  50.09 கோடியாக உயர்ந்துள்ளது.

பொருளாதாரத்தை மேம்படுத்த அதிரடி திட்டங்கள்! நிர்மலா சீதாராமன் !

இதில் 55.5 சதவீதம் பெண்கள் வங்கிக்கணக்கு தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.  அதிலும்  67 சதவீதம் கிராமம் மற்றும் நகரத்தின் புறநகர் பகுதியில் தொடங்கப்பட்டவை என குறிப்பிட்டுள்ளார்.  2015ல் ரூ15,670 கோடியாக மட்டுமே  இருந்த டெபாசிட், 2023 ஆகஸ்டில் 2.03 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 2015 மார்ச் மாதம் சராசரி டெபாசிட் 1065 ஆக இருந்த நிலையில், தற்போது 4063 ஆக அதிகரித்துள்ளது. இந்தியா முழுவதும் 34 கோடி பேருக்கு ரூபே  கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.  இந்த கார்டுகள் வைத்திருப்பவர்கள் அனைவரும்  ரூ2 லட்சம் விபத்து இன்சூரன்ஸ் உடன் வழங்கப்பட்டுள்ளது. 2023ல் ஆகஸ்டில் 58 சதவீத அக்கவுண்ட்டில் 8 சதவீதம் குறைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை