தங்கம் வாங்க சரியான நேரம்... மீண்டும் சவரனுக்கு ரூ.320 ரூபாய் குறைவு!

 
மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை!!

இல்லத்தரசிகள் தங்கம் வாங்குவதற்கு இது தான் சரியான நேரமாக உள்ளது. தங்கத்தின் விலை இனி வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கவே வாய்ப்பு என்று பொருளாதார நிபுணர்கள் கணித்திருக்கும் நிலையில், இன்று தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. சென்னையில் இன்றைய காலை நேர நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் 5,565 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ. 320 குறைந்து ஒரு சவரன் ரூ.44,520 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதிரடியாக உயர்ந்த தங்கம்!! சவரனுக்கு ரூ240 அதிகரிப்பு!!

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்றைய விலை சரிவு இல்லத்தரசிகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. தங்கத்தில் முதலீடு செய்வது என்பது என்றைக்கு இருந்தாலும் பாதுகாப்பானதாகவே பார்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 320 ரூபாய் உயர்ந்து, ரூ.44,520-க்கு விற்பனையாகிறது.

நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.4,591-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 32 ரூபாய் உயர்ந்து, ரூ.4,559-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம்

அதே சமயம் வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. நேற்று ஒரு கிலோ வெள்ளி  77,800 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலை கிலோவுக்கு 100 ரூபாய் குறைந்து, ரூ.77,700-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. வெள்ளியின் விலையில் பெரிய அளவில் குறையவில்லை என்றாலும், தங்கத்தின் விலை குறைவு  மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

ஒரு புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web