வைரல் வீடியோ.. ரிஷப் பந்த் சைக்கிளிங் உடற்பயிற்சி..!!

 
ரிஷப் பந்த்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லி - டேராடூன் நெடுஞ்சாலை  கார் விபத்தில் படுகாயம் அடைந்தார். இதனால், ரிஷப் பந்த்  இந்த வருட ஐபிஎல் தொடரில் விளையாட முடியவில்லை. அத்துடன் ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் விளையாட முடியாத சூழ்நிலையில் இருக்கிறார்.  அவரது உடல் நலம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்கள்  வீடியோவை பதிவிட்டு வருகிறார்.  அதன்படி, தற்போது அவர் எக்சர் சைக்கிளில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதள பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.  அந்த வீடியோவை  ' நல்ல எண்ணங்கள் மட்டுமே' என தலைப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
 

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர்  ரிஷப் பண்ட். இவர்  2022 டிசம்பரில் டெல்லியில் இருந்து உத்தரகாண்டுக்கு சொகுசு காரில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.  அதன் பின்  அவருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.  ரிஷப் பண்ட் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டில் இருந்தபடியே ஓய்வு எடுத்தார். தொடர்ந்து   ஓராண்டு   ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.  


 

அவர் தன்னை மீட்டுக் கொள்வதற்கான அனைத்து முயற்சிகளிலும் இறங்கிய ரிஷப் பண்ட், சிறு சிறு உடற்பயிற்சிகள், நீச்சல் போன்ற பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தார். இதையடுத்து கடந்த சில மாதங்களாக பெங்களுரூவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். ஆசிய கோப்பை 2023 மற்றும் உலகக் கோப்பை 2023 நடக்க உள்ள நிலையில், அதற்கு தயாராகி வருகிறார்.அதற்காக  தனது உடல்தகுதியை நிரூபிக்கும் வகையில், பேட்டிங் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். இது குறித்த வீடியோ  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web