கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்... 5வது நாளாக டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம்... பேச்சுவார்த்தைத் தோல்வி!

 
கேஸ் சிலிண்டர் லாரி

தமிழகம் உட்பட 4 மாநிலங்களில் சமையல் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. டேங்கர் லாரி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் தோல்வியடைந்த நிலையில், சமையல் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் தொடங்கிய வேலைநிறுத்தம் இன்று 5வது நாளாக நீடிக்கிறது. ஆயில் நிறுவனங்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தீர்வின்றி முடிவடைந்ததால், போராட்டம் தொடரும் என சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

2025–2030 ஆண்டுக்கான புதிய டெண்டரில் 3,500 டேங்கர் லாரிகள் தேவை என அறிவித்திருந்த ஆயில் நிறுவனங்கள், 2,800 லாரிகளுக்கே அனுமதி கடிதம் வழங்கியுள்ளன. மீதமுள்ள வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து, தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் 9-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறது.

சிலிண்டர் கேஸ் லாரி ஸ்டிரைக்

இதன் விளைவாக, சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து பாட்லிங் பிளாண்டுகளுக்கு கியாஸ் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற காணொலி பேச்சுவார்த்தையில் 3 ஆயில் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஆனால், கோரிக்கைகள் ஏற்கப்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

HP கேஸ்

“நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் வேலைநிறுத்தம் தொடரும். இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும்; அதில் தீர்வு கிடைத்தால் போராட்டம் வாபஸ் பெறப்படும்,” என சங்கத் தலைவர் சுந்தரராஜன் தெரிவித்துள்ளார். தற்போது எல்.பி.ஜி. சிலிண்டர் விநியோகத்தில் தடைகள் உருவாகும் அபாயம் குறித்து அதிகாரிகள் கவனித்து வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?