நடிகை ரோஜாவுக்கு ஆதரவு திரட்ட ஆர்.கே. செல்வமணி அரசியல் பிரவேசம்.. எதிர்க்கட்சிகள் அதிர்ச்சி!!

 
ரோஜா செல்வமணி

தமிழ் திரையுலகில் செம்பருத்தி  படத்தின் மூலம் அறிமுகமாகி 90களில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகர் ரோஜா. இவர் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் ஆர்.எஸ். செல்வமணியையே  காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் தற்போது ஆந்திராவில் முழு நேர அரசியல்வாதியாக இருந்து வருகிறார். அதன்படி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் விளையாட்டு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக பணிபுரிந்து  வருகிறார்.

ரோஜா செல்வமணி

இவரை எதிர்க்கட்சிகள் ஆபாசமாக பேசவே இது குறித்து ஊடகங்களுக்கு கண்ணீர் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். பல்வேறு சர்ச்சைகளும், கண்டனங்களும், சில ஆதரவு குரல்களும் எழுந்தன. இதனையடுத்து கணவர் செல்வமணியையும் ரோஜா ஆந்திர அரசியலில் ஈடுபடுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குநர் செல்வமணி சினிமா மற்றும்  அரசியல் வாழ்க்கையில் மனைவிக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். அதே நேரத்தில் செல்வமணி ஆந்திர அரசியலில் நேரடியாக தலையிடுவது இல்லை. தற்போது  ஆந்திர அரசியலில் இயக்குனர் ஆர்.கே. செல்வமணி நேரடியாக களம் இறங்கியுள்ளார்.

ரோஜா அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி  பொதுக்கூட்டத்தில் ஆர்.கே. செல்வமணி கலந்து கொண்டார். அதில் அவர்   'கிராமம் மற்றும் நகர்ப்புற மக்களுக்காக ஆந்திர அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  மக்களின் மகிழ்ச்சி தொடர வேண்டும் என்றால் ஓய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் ஆந்திராவில் முதல்வராக வரவேண்டும்' என தெரிவித்தார்.  இதன் மூலம் ஆர்.கே. செல்வமணி ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் பணியாற்ற தொடங்கியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது இதனால் ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web