செம... நகராட்சி கழிவுகளால் சாலை உருவாக்கம்.. மத்திய அமைச்சர் அதிரடி!!

 
சாலை

 வாகன போக்குவரத்து நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாகன போக்குவரத்துக்களால் வெளியாகும் கார்பன் டை ஆக்சைடை  குறைப்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அத்துடன் அதிக புகையை வெளியேற்றுவதால் மின்சார வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. சாலை கட்டுமானங்களில்   நகராட்சி கழிவுகளைப் பயன்படுத்தி கொள்ளலாம் என   மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

சாலை
 இதுகுறித்து  நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் விடுத்த செய்திக்குறிப்பில்  ‘’சாலை கட்டுமானத்தில் நகராட்சி கழிவுகளைப் பயன்படுத்துவதற்கான கொள்கையை  இறுதி செய்கிறோம்.கட்டுமானச் சாதனங்கள் உற்பத்தியில் புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்தாத நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்குவது குறித்து அரசு பரிசீலணை நடைபெற்று வருகிறது.வாகனப் போக்குவரத்தில் கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்க பல்வேறு முயற்சிகளை  எடுத்து வருகிறோம். டெல்லி மற்றும் ஜெய்ப்பூர் இடையே எலெக்ட்ரிக் நெடுஞ்சாலை அமைக்க திட்டமிட்டு வருகிறது.

நிதின் கட்காரி
ரயில்கள் மின்சாரத்தில் இயக்கப்படுவது போல வாகனங்களுக்கு மின்சார வழித்தடம் தனியாக உருவாக்கப்படும். இந்த நடைமுறை ஏற்கனவே   ஸ்வீடன்,நார்வே போன்ற நாடுகளில் தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. மின்சார கேபிள்கள் மூலம் வழங்கப்படும் மின்சாரத்தை பயன்படுத்தி இந்தப் பாதையில் வாகனங்கள் செல்லும். தற்போது பல்வேறு தொழில்நுட்பங்களை  அமைச்சகம் மதிப்பீடு செய்து வருகிறது’’ எனத் தெரிவித்துள்ளார். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web