ரோடு ரோலர் மோதி பைக்குகள், கடைகள் சேதம் .... சாலை அமைக்கும் போது விபரீதம்!
மதுரையில் முக்கிய சாலைகளில் பல பகுதிகளில் சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுவிடுகிறது. அந்த வகையில் மாடக்குளம் பகுதியில் அமைக்கப்பட்ட சாலைகளில் புதிய தார் சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இதற்காக ரோடு ரோலர் வாகனத்தை பயன்படுத்தி அங்கு போடப்பட்டிருந்த ஜல்லிகள் மீது ஏறி வரும் போது திடீரென ரோடு ரோலர் தனது கட்டுப்பாட்டினை இழந்தது. இதற்கு அருகில் உள்ள 2 கடைகள் மற்றும் பைக் மீது ஏறியதால் பைக்குகள் மற்றும் கடைகள் சேதகமடைந்து உள்ளன.
வாகனம் கட்டுப்பாட்டை இழந்த போது அந்த பகுதியில் பொதுமக்கள் யாரும் இல்லை.அதிர்ஷ்டவசமாக இதனால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேக் இல்லாததால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!