1.5 லட்சம் மொத்தமா அபேஸ்.. மளிகை கடை மாடியில் இருந்து குதித்த முகமூடி கொள்ளையன் கை வரிசை..!

 
சாகுல் ஹமீது கடை

தென்காசி அருகே உள்ள நன்னகரம் மின்நகரை சேர்ந்த 52 வயதான சாகுல் ஹமீது என்பவர் தென்காசி சுவாமி சன்னதி பஜார் கீழ்பகுதியில் உள்ள 3 மாடி கட்டிடத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த சனிக்கிழமை இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் ஞாயிற்றுக்கிழமை அன்று காலை சாகுல் ஹமீதின் உறவினர் ஒருவர் சாவியுடன் வந்து கடையை திறந்துள்ளார். அப்போது  கடையில் கல்லா பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 1½ லட்சம் பணம் திருடப்பட்டு, கடையின் 3வது மாடியில் உள்ள கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

புதிய கட்டுப்பாடுகளால் தென்காசியில் கடைகள் அடைப்பு | tamil news Shops  closed due to new restrictions in Tenkasi

இதுகுறித்து தென்காசி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக இன்ஸ்பெக்டர் ஜான்பீட்டர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மளிகைக் கடையின் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைப் பார்த்தபோது, ​​நள்ளிரவில் ஒரு மர்ம நபர் முகத்தை துணியால் மூடிக்கொண்டு மாடியிலிருந்து  இறங்கி கடைக்குள் வந்துள்ளார்.

மேலும், கண்காணிப்பு கேமராவை மறைத்த பிறகு, பணப்பெட்டியில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது.. மளிகை கடையின் பின்புறம் உள்ள வீட்டின் மாடியில் இருந்து, மளிகை கடை கட்டிடத்திற்கு மர்ம நபர் குதித்தது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. விசாரணையில், அவர் மாடியில் இருந்து கீழே இறங்கி, மளிகைக் கடையின் 3வது மாடியில் உள்ள கதவை உடைத்து கடைக்குள் நுழைந்தது தெரியவந்தது.

Tenkasi, Tenkasi : தென்காசி: தென்காசி பழைய பேருந்து நிலையத்தில் தனியார்  பேருந்தை சேதப்படுத்திய மூன்று நபர்களுக்கு 3 வருட சிறை தண்டனை மற்றும் ...

தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபரை தேடி வருகின்றனர். தென்காசியில் மளிகைக் கடையில் பணப்பெட்டியில் இருந்த ரூ.1.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web