செம... ஐசிசி தரவரிசையில் ரோஹித் சர்மா முதலிடம் பிடித்து சாதனை!

 
ரோஹித்

சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடர்களில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, ஐசிசி ஒருநாள் பேட்டர் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். இந்த சாதனையால், அவர் 781 புள்ளிகளுடன் உலகின் நம்பர் 1 ஒருநாள் பேட்டராக உயர்ந்துள்ளார்.

ரோஹித்தின் இந்த வெற்றி, 38 வயதில் ஐசிசி பட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளது. 2011 ஆம் ஆண்டு சச்சின் 38 வயது 73 நாட்களில் முதலிடம் பிடித்திருந்தார்; தற்போது 38 வயது 182 நாட்களில் ரோஹித் அந்த சாதனையை கடந்து புதிய பதிவை உருவாக்கியுள்ளார்.

சமீபத்திய தொடரில் 202 ரன்கள் குவித்த ரோஹித், கடைசி போட்டியில் சதம் அடித்து இந்தியாவை வெற்றிக்குத் தள்ளியிருந்தார். டெஸ்ட் மற்றும் டி20 வடிவங்களில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், ஒருநாள் போட்டிகளில் இன்னும் தனது ஆற்றலை நிரூபித்து வரும் ரோஹித் சர்மாவின் இந்த சாதனை, இந்திய கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!