த்ரிஷாவுடன் ரொமான்ஸ்... தெறிக்க விட்ட அஜித்... வைரலாகும் ‘விடாமுயற்சி’ போஸ்டர்!

 
த்ரிஷா, அஜித்

விடாமுயற்சி படத்தின் 3வது போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. 



மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர்கள் அஜித், த்ரிஷா உள்ளிட்டப் பலர் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ படம் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் அஜர்பைஜான் நாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஆக்‌ஷன் பிளாக் மேக்கிங் காட்சிகள், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், செகன்ட் லுக் ஆகியவை வெளியிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அஜித்- த்ரிஷா ரொமாண்டிக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. 
இதுவரை வெளியான போஸ்டர்களில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் காணப்பட்ட அஜித் இதில் இளமையான தோற்றத்தில் காணப்படுகிறார். த்ரிஷா-அஜித் இருவரும் கேண்டில் லைட் டின்னரில் மகிழ்ச்சியோடு இருக்கும் ஸ்டில் வெளியிடப்பட்டுள்ளது. 
அஜித்- த்ரிஷா இருவரும் ஜோடி சேர்ந்த ‘மங்காத்தா’, ‘என்னை அறிந்தால்’ உள்ளிட்டப் படங்களில் கதைப்படி இருவரும் ஜோடி சேர மாட்டார்கள். இந்நிலையில், ‘விடாமுயற்சி’ படத்திலாவது இருவரும் ஒன்று சேர்வார்களா என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web