5 குழந்தைகளுக்கு அப்பா ரொனால்டோ... நீண்டநாள் காதலி ஜார்ஜினாவை கரம் பிடிக்கிறார்!

 
ரொனால்டோ
 

உலக கால்பந்து உலகின் சூப்பர் ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது நீண்டநாள் துணை ஜார்ஜினா ரோட்ரிக்ஸை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பையும், வாழ்த்து வரவேற்பையும் உருவாக்கியுள்ளது.

2016 முதல் ஜார்ஜினாவுடன் வாழ்ந்து வரும் ரொனால்டோவுக்கு, அவருடன் சேர்ந்து தற்போது 5 குழந்தைகள் உள்ளனர். முந்தைய காதலி இரினா ஷாய்க் உடன் 5 ஆண்டுகள் உறவில் இருந்த ரொனால்டோ, 2015ல் அதனை முடித்துக்கொண்டார். அதன்பிறகு ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் வாழ்வில் இணைந்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் இவர்கள் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். திருமணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளிவராத நிலையில், 2026 உலகக்கோப்பை கால்பந்து தொடர் முடிந்ததும் திருமண விழா நடைபெறும் என ரொனால்டோ தெரிவித்துள்ளார். கோப்பையை கைப்பற்றி, அதன் பின் திருமண பந்தத்தில் இணைவதே தனது கனவு என அவர் கூறியுள்ளார்.

ரொனால்டோ தற்போது விளையாட்டு வருமானத்துடன், உலகளாவிய விளம்பர ஒப்பந்தங்களின் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார். ஜார்ஜினா ரோட்ரிக்ஸும் சமூக ஊடகங்களில் பிரபலமாக உள்ளார்.ரொனால்டோ திருமண அறிவிப்பு உலக ரசிகர்களிடையே பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!