நீதிமன்றத்தில் ரவுடி துண்டித்துக் கொலை!! பரபரப்பு

கும்பகோணம் அடுத்த திப்பிராஜபுரம் பகுதியில் வசித்து வருபவர் பிரபல ரவுடி செந்தில் (எ) ஓணான். செந்தில் மீது கொலை, கொள்ளை, சிலைக் கடத்தல், ஆள் கடத்தல் உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2016ல் வலங்கைமானில் நடந்த கொலை தொடர்பான வழக்கு விசாரணைக்காக செந்தில் திருவாரூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார். அதன் பிறகு விசாரணை முடிந்து கார் மூலம் ஊர் திரும்பினார்.
கார் கொரடாச்சேரி குடவாசல் இடையே நாகலூர் என்ற இடத்தில் சென்ற போது பின்னால் வந்த ஒரு கார், செந்தில் காரை வழிமறித்தது. காரில் இருந்து இறங்கிய மர்ம கும்பல், செந்திலை சராமாரியாக வெட்டினர்.செந்திலின் தலையை துண்டித்து விட்டு, அந்த கும்பல் தப்பிச் சென்றது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
படுகாயம் அடைந்த வழக்கறிஞர் அகிலன் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.காவல்துறையினர் செந்திலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!