பிரபல ரவுடி ராஜன் குத்திக் கொலை... பெரும் பரபரப்பு!
குமரி மாவட்டம் இரணியல் அருகே வடக்கு பேயன்குழியைச் சேர்ந்த லாரி டிரைவரும், பல வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவருமான ராஜன் (54), திங்கள்சந்தை மற்றும் நெய்யூர் பகுதிகளில் ரவுடியாகச் சுற்றித்திரிந்தவர். கடந்த ஆண்டு குளச்சலில், மது அருந்தும் தகராறில் அருள்பாபி என்ற எழுத்தாளரை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளிவந்து கடந்த ஆறு மாதங்களாக சொந்த ஊரில் தங்கி வந்தார்.

அங்கு கோயிலுக்கு சொந்தமான கலையரங்கத்தில் தங்கி வந்த ராஜன், விபத்துக்குப் பிறகு கைத்தடி உதவியுடன் நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் போது, தனது அண்ணன் உறவுக்காரர் கோபாலகிருஷ்ணனின் மனைவியிடம் தவறாக நடக்க முயன்றதாக ராஜன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதை அறிந்த கோபாலகிருஷ்ணன், கோபத்தில் கலையரங்கம் சென்றார்.

அங்கே ராஜனை சந்தித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர், ஆத்திரத்தில் கைத்தடியால் ராஜனை தாக்கினார். கடுமையான அடியால் ராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் கோபாலகிருஷ்ணன் நேராக இரணியல் காவல் நிலையத்துக்குச் சென்று சரணடைந்தார். இந்த சம்பவம் வடக்கு பேயன்குழி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
