சல்யூட்.. கொட்டும் பனியில் கர்ப்பிணியை 5 கி.மீ தோளில் தூக்கிச் சென்ற ராணுவ வீரர்கள்!

 
ராணுவ வீரர்

ஜம்மு காஷ்மீரில் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. மேலும் உறைபனியும் நிலவுகிறது. இதன் காரணமாக பல இடங்களில் வாகன போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குப்வாரா மாவட்டத்தில் உள்ள பதாகிட் என்ற கிராமத்தை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ஒருவர் மருத்துவ உதவிக்காக காத்திருந்தார். ஆனால் அங்கு வாகனங்கள் செல்லமுடியாத நிலை உள்ளது.

கர்ப்பிணியின் உறவினர்கள் கடுமையாக போராடியும் எந்த வாகனத்தையும் தயார் செய்யமுடியவில்லை. இதனால் அவரால் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் தவித்தார். இந்த தகவல் அங்கு முகாமிட்டிருந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு தெரியவந்தது. 

ராணுவ வீரர்

அங்கு சென்ற ராணுவ வீரர்கள் சிலர் கர்ப்பிணியை கொட்டும் பனிக்கு நடுவே சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் தங்கள் தோள்களில் தூக்கிச் சென்றனர். பின்னர் அங்குள்ள பாலத்தின் அருகே தயாராக நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்சில் ஏற்றி அருகே உள்ள சுகாதார மையத்தில் சேர்த்தனர். 

அங்கு கர்ப்பிணிக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. அந்த பெண் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளனர். சரியான நேரத்துக்கு கொண்டுவந்ததால் தாய், சேய் நலம் என மருத்துவர்கள் கூறினர்.

ராணுவ வீரர்

அந்த பெண்ணின் குடும்பத்தினர், கர்ப்பிணியை தோளில் சுமந்து வந்து உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்த இந்திய ராணுவ வீரர்களுக்கு நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த தொழில் அதிக லாபம் தரும்

 

From around the web