தமிழகம் முழுவதும் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ1000/-?!

 
மகளிர் உரிமை தொகை

தமிழகம் முழுவதும் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ1000  மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15ம் தேதி  முதல்வரால் தொடங்கிவைக்கப்பட்டது.   அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில் சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பத்தலைவிகளுக்கு இந்த உரிமைத் தொகை அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.   
இத்திட்டத்தில் வங்கிகள் மூலம் தகுதி வாய்ந்த மகளிருக்கு மாதம்தோறும் ரூ1,000 அனுப்பி வைக்கப்படும் . தமிழகம் முழுவதும்  மொத்தம் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளர்கள் இத்திட்டத்தில் பயனடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   

23 மீனவர்கள் சிங்களப் படையால் கைது: மீனவர் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு தேவை! – டாக்டர் ராமதாஸ்

இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்த அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் நடைபெறும் குளறுபடிகள்  பெண்களிடையே பெரும் ஏமாற்றத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது   தகுதி இருந்தும் மகளிர் உரிமைத் தொகை மறுக்கப்படுவது ஒருபுறம் இருக்க, மேல்முறையீடு செய்யச் செல்லும் இடங்களில் அவர்கள் நடத்தப்படும் விதம் கண்டிக்கத்தக்கது  .

மகளிர் உரிமை திட்டம்

ஏற்கப்படாத விண்ணப்பங்களுக்கு சொந்தக்காரர்களான 57 லட்சம் பேரும் கோட்டாட்சியர்களிடம் மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.    பல ஊர்களில் அதிக வருமானம், அதிக சொத்துகள் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் உண்மையாகவே   வறுமையில் வாடும் தங்களின் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.  ஒரே மாதிரியான சூழலில் வாழும் பெண்களில் ஒருவருக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்பட்டு, இன்னொருவருக்கு அது மறுக்கப்பட்டால், அது பாதிக்கப்பட்ட மக்களிடம் பெரும் வெறுப்பையும், கோபத்தையும் ஏற்படுத்தும்.  
மகளிர் உரிமைத் தொகை என்பதே அனைவருக்கும் அடிப்படை வருவாய் என்ற தத்துவம் தான்.  தேர்தல் அறிக்கையில் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு செயல்படுத்தப்படும் எனக் குறிப்பிடப்படவில்லை. அதற்கு மாறாக, மொத்த குடும்பங்களின் எண்ணிக்கையில் பாதிக்கும் குறைவாகவும், விண்ணப்பித்தவர்களில் மூன்றில் இரு பங்கிற்கும் குறைவானவர்களுக்கும் மட்டும் உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web