மாதம் ரூ1000 உதவித் தொகை ... நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!!

 
உயர்கல்வி உதவித்தொகை

தமிழகத்தில் 6 முதல் 12 ம் வகுப்பு  வரை அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் ரூ100 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் தொகை வழங்கும் திட்டம்  முவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. செப்டம்பர் 5,2022 முதல்    அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, மேல் படிப்பு, தொழில்நுட்ப படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு ஒவ்வொரு மாதமும்  ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் தொடங்கப்பட்டது.

கல்வி உதவித்தொகை
அந்த வகையில் நடப்பாண்டுக்கான  2023-24-ம் கல்வி ஆண்டிற்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பயனாளிகள் சேர்க்கை நாளை முதல் தொடங்கப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உடைய மாணவிகள் அதிகாரப்பூர்வ  இணைய தளமான   (www.pudhumaipenn.tn.gov.in)ல் விண்ணப்பிக்கலாம்.  இவ்வலைத்தளத்தில், மாணவிகள் அனைவரும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள்  மூலமாக மட்டுமே நாளை முதல் பதிவு செய்யலாம். 

புதுமைப்பெண்
அரசு பள்ளிகளில் படித்த  மாணவிகள் மட்டுமே இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள். மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதி வரம்பு குறித்து அனைத்து மாணவிகளுக்கும் கல்வி படிக்கும் நிறுவனங்களில் 4ம் தேதி முதல் சிறப்பு முகாம்கள் நடைபெறும். மாணவிகள் தவறாமல்  ஆதார் அட்டை, ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள கைப்பேசி எண், ஆதாருடன் இணைக்கப்பட்ட  வங்கி கணக்கு எண் மற்றும் மாற்றுச் சான்றிதழ் இவைகளை சமர்ப்பிக்க வேண்டும். மேல் படிப்பு, தொழில்நுட்ப படிப்புகளில் பயிலும் இத்திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த மாணவிகள் அனைவரும் தாங்கள் பயிலும் கல்லூரியில் உள்ள பொறுப்பு அலுவலர்கள்  விண்ணப்பித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web