அடி தூள்.... உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்பவர்களுக்கு மாதம் ரூ10000/- !!

இந்தியா முழுவதும் முந்தைய ஆண்டுகளை காட்டிலும் கடந்த 10 ஆண்டுகளில் உடல் உறுப்பு தானம் 3 மடங்கு அதிகரித்துள்ளது. 2013ல் 5,000 ஆக இருந்த உறுப்பு தானம் தற்போது 15,000 ஆக உயர்ந்துள்ளது. உடல் உறுப்பு தானத்தை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் அடிப்படையில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு விடுப்பு காலம் 30 நாட்களில் இருந்து 60 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் அனைத்து ஏழை மக்களுக்கும் மாதத்திற்கு ரூ.10,000 நிதி உதவி வழங்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா “உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் அனைத்து ஏழை மக்களுக்கும் மாதத்திற்கு ரூ.10,000 நிதி உதவி வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது” எனக் கூறியுள்ளார்.
உடல் உறுப்பு தானம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மன்சுக் மாண்டவியா மற்றொரு உயிரைக் காப்பாற்ற உடல் உறுப்புகளை தானம் செய்வதை விட மனித குலத்திற்கு செய்யும் சேவை வேறு எதுவும் இருக்க முடியாது. உயிருடன் இருக்கும்போது ரத்த தானம் செய்யுங்கள், இறந்த பிறகு உடல் உறுப்புகளை தானம் செய்யுங்கள் என கூறியுள்ளார். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் அனைத்து ஏழை மக்களுக்கும் மாதத்திற்கு ரூ.10,000 நிதி உதவி வழங்குவதுடன் அவர்களின் வழக்கமான பரிசோதனைகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்படும் . 2024 இறுதிக்குள், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் உறுப்புகளை மீட்டெடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!