பகுதி நேர ஆசிரியர்களுக்கு ரூ2500 ஊதிய உயர்வு... அரசாணை வெளியீடு... !

 
36,000 ஆசிரியர்கள் பணி நீக்கம்; உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் தனியார் பள்ளிகளுக்கு இணையான  கல்வித் தரத்தை கொடுக்க தமிழக அரசு பெரும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில்  2012ல்  உடற்கல்வி, ஓவியம், தையல், இசை, தோட்டக்கலை உட்பட   12000  பகுதி நேர ஆசிரியர்கள்ரூ. 5000 தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் 2014ல் ரூ2000 ஊதியம்   உயர்த்தப்பட்டது.2017ல்  ரூ. 700 உயர்த்தப்பட்டது.

ஆசிரியர்கள்
2021ல்  ரூ.2,300 ஊதியம் உயர்த்தப்பட்டதால் இவர்கள் அனைவருக்கு மாதச் சம்பளம் ரூ.10000 ஆக உயர்ந்தது.   சமீபத்தில்  ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள்  போராட்டம் நடத்தினர்.இதில் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை. இது குறித்து பரிசீலணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதன்படி  பள்ளிக் கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் 12,105 பகுதி நேர ஆசிரியர்களுக்கு ரூ2,500  ஊதியம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஆசிரியர்கள்

இந்த அரசாணையின் படி நடப்பு மாதத்தில் இருந்து பகுதி நேர ஆசிரியர்களுக்கு ரூ10000லிருந்து ரூ12500 மாத ஊதியமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நடப்பு மாதத்தில் இருந்து உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பு பகுதி நேர ஆசிரியர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web