சிறைச்சாலை கேன்டீனில் மாதந்தோறும் ரூ.25,000 லஞ்சம் | விஜிலன்ஸ் தலைமைக்காவலர் கைது!

 
புழல் சிறை

சென்னையை அடுத்துள்ள புழல் சிறைச்சாலையில் உள்ள கேன்டீனில் மாதந்தோறும் ரூ.25,000 லஞ்சம் வாங்கி கொண்டிருந்த விஜிலன்ஸ் தலைமைக் காவலர் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புழல் சிறைச்சாலையின் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் ராஜேஷ்(36). இவர் சென்னை புழல் மத்திய சிறைச்சாலை இரண்டில் விஜிலென்ஸ் பிரிவில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார்.

சிறை

கடந்த 6 வருடஙக்ளாக புழல் சிறைச்சாலை -1 ல் காவலராக பணியாற்றி வரும் இவர், பின்னர் அயல் பணியாக புழல் சிறை 2-ல் விஜிலென்ஸ் பிரிவில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் புழல் சிறையில் உள்ள கேன்டீனில், மாதந்தோறும் ராஜேஷ் ரூ.25,000 லஞ்சம் பெற்று வருவதாக தொடர்ந்து புகார் வந்தது. இதனையடுத்து புழல் சிறை விஜிலன்ஸ் அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையின் இறுதியில் ராஜேஷ் மாதாமாதம் 25 ஆயிரம் ரூபாயை ஜி பே மூலம் லஞ்சமாக பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து காவலர் ராஜேஷை புழல் சிறை 2 விஜிலன்ஸ் பிரிவில் இருந்து சிறை 1-க்குப் பணி மாற்றும் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர். மேலும் சிறைக் காவலர் ராஜேஷிடம் இது தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருவதாகவும் விசாரணைக்கு பின்னர் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லஞ்சம்

ஏற்கெனவே புழல் சிறையில் உள்ள கேன்டீனில் டீ,காபி 50 ரூபாய், சிக்கன் பிரியாணி 700 ரூபாய், பீடிக் கட்டு 400 ரூபாய்க்கு விற்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தது வரும் நிலையில் விஜிலன்ஸ் தலைமைக்காவலர் கேன்டீனில் லஞ்சம் பெற்ற விவகாரம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web