இளைஞர்களுக்கு மாதம் ரூ4000 ... காங்கிரஸ் அதிரடி அறிவிப்பு!!

தெலுங்கானா மாநிலம் உருவாகி இதுவரை 2 முறை சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. 2 தேர்தல்களிலும் பிஆர்எஸ் கட்சி தான் ஆட்சியில் இருந்து வருகிறது. சட்டசபை காலம் முடிவுக்கு வருவதையொட்டி நவம்பர் 30ம் தேதி தெலங்கானாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு அமைந்துள்ள 119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு எதிர்க்கட்சியாக இருந்து வரும் காங்கிரஸ் எதிர்க்கட்சியாக தொடர்கிறது.
இந்த முறை ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கடுமையாக போராடி வருகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தெலுங்கானா மாநிலத்தில் பெண்களுக்கு மாதம் ரூ2500 , சிலிண்டர் ரூ.500 என தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அறிவித்தார்.
தற்போது தேர்தல் நெருங்கி வரும் வேளையில் காங்கிரஸ் தனது தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது.
காங்கிரசின் முக்கியமான சில வாக்குறுதிகள்….
மகளிருக்கு மாதம் 2,500 ரூபாய் நிதியுதவி,
ரூ.500க்கு கியாஸ் சிலிண்டர்.
பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்.
அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம்.
வீடு கட்டுவதற்கு ரூ.5 லட்சம்
மாணவர்களுக்கு 5 லட்ச ரூபாய் உதவித்தொகை
தெலுங்கானா இயக்கப் போராளிகளுக்கு 250 சதுர அடியில் வீட்டு மனை வழங்கப்படும்.
மூத்த குடிமக்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள், பீடி தொழிலாளர்கள், ஒற்றை பெண்கள், தட்டிப்பறிப்பவர்கள், நெசவாளர்கள், எய்ட்ஸ் மற்றும் ஃபைலேரியா நோயாளிகள், சிறுநீரக நோயாளிகள், வேலை இல்லா இளைஞர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ4000 ஓய்வூதியம்.
10 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீடு
விவசாயிகளின் 2 லட்சம் கோடி கடன் தள்ளுபடி.
விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் மின்சாரம்
60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்
ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்
சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!
கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!