சர்ச்சை போஸ்டர்... ரூ2000 நோட்டுகளுக்கு ரூ500 நோட்டுகள் மாற்றித் தரப்படும்... !

 
நோட்டீஸ்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  பர்கூருக்கு செல்லும் வழியில் மேம்பாலத்தை ஒட்டி  பல இடங்களில் சுவரொட்டி  ஒட்டப்பட்டுள்ளது.  அதில் ரூ2000  நோட்டுக்கு பதிலாக ரூ500  நோட்டுகள் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.  அதில் செல்போன் நம்பர் ஒன்று குறிப்பிடப்பட்டு இருந்தது.  அந்த வழியாக சென்ற பொதுமக்கள்  பார்த்து குழப்பம் அடைந்தனர். சிலர் அதில் குறிப்பிட்டுள்ள   எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினார்கள்.

2000

அப்போது அந்த நபர், ரூ 2000 நோட்டுகள் தந்தால் தான், ரூ500  நோட்டுகள் தருவேன் என்றும், மாற்றி கொடுப்பதற்கு ரூ500  கமிஷன் எனக் கூறவில்லை. இது குறித்து அறிந்த போலீசாரும் சம்பந்தப்பட்ட நபரிடம் போனில் பேசி விசாரணை நடத்தினார்கள். அதில் அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பெலவர்த்தி ஊராட்சி வள்ளுவர்புரத்தில் வசித்து வருபவர்    . பொங்கல் பண்டிகையின் போது அவரது வீட்டை சுத்தம் செய்யும் போது ரூ2000  நோட்டுகள் 4 கிடைத்ததாக  கூறினார்.

2000

அத்துடன்  சென்னை சென்று ரிசர்வ் வங்கியில் மாற்றி வந்ததாகவும், ஆகவே ரூ.500 கமிஷன் பெற்று இதை போல மாற்றி கொள்ளலாம் என்ற எண்ணத்தில் தான் சுவரொட்டி ஒட்டியதாகவும் கூறியுள்ளார்.   போலீசாரிடம் பேசிய அவர், உங்களிடம் ஏதேனும் ரூ2000  உள்ளதா... கொடுங்க மாற்றி தருகிறேன் எனவும்  கேட்டுள்ளார். இது குறித்து சம்பந்தப்பட்டவர்   மீது வழக்குப்பதிவு செய்து போலீசார்  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பர்கூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 
 

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web