அதிர்ச்சி.. டீக்கடைக்கு ரூ61000 மின்சாரக் கட்டணம்.. !

 
hotel

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள புத்தனேரி பகுதியில் வசித்து வருபவர்   பூபதிராஜா. இவர் திருநெல்வேலி - தூத்துக்குடி 4 வழிச்சாலையில் உள்ள வசவப்பபுரத்தில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். மேலும் இவர் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக இந்த கடையை  நடத்தி வருகிறார். இந்த கடைக்கு 2 மின் இணைப்புகள். 2022ல்   மேலும் ஒரு மின் இணைப்பு பெற்று டீக்கடை தனியாக நடத்தி வருகிறார்.  மேலும் இந்த இணைப்புக்கு தனியாக கடந்த 8 மாதங்களாக மின் கட்டணம் கட்டப்பட்டு வருகிறது.

மின்சாரம் eb

இதில் முதல் 2 மின் கட்டணமும், சரியான அளவில் ரூ. 413 மட்டும் வந்திருந்தது.  கடந்த மாதத்திற்கான கட்டணம் ரூ.40 ஆயிரம் கட்ட வேண்டும் என்று மின் கட்டணம் அளவீடு செய்தவர் கூறிச் சென்றார்.  பூபதி ராஜா இதுகுறித்து வல்லநாடு மின்வாரிய அலுவலரிடம் நேரில் சென்று கேட்டுள்ளார்.  அதற்கு டெபாசிட் பணத்தை கழித்து நீங்கள் ரூ.26000 கட்ட வேண்டும் எனக் கூறியுள்ளனர்.   வேறு வழியின்றி அந்த கட்டணத்தை பூபதிராஜா கட்டிவிட்டு வீடு திரும்பியுள்ளார். பின்னர் இந்த மாதத்திற்கு மின்கட்டணம் எடுக்க வந்த மின்வாரிய ஊழியர் மின் கட்டணத்தை அளவீடு செய்து இந்த டீ கடைக்கு மட்டும் ரூ.61000  மின் கட்டணம் வந்துள்ளதாக கூறியுள்ளார்.  இதனால் அதிர்ச்சி அடைந்த பூபதிராஜா மீண்டும் வல்லநாட்டில் உள்ள மின் வாரிய அலுவலரிடம் சென்று இதுகுறித்து கேட்டுள்ளார்.

மின்சாரம்

ஆனால் அவர்கள் அதற்கு முறையான பதில் கூறவில்லை . நேற்று   மின்வாரிய ஊழியர் ஒருவர் கடைக்கு வந்த இந்த கட்டணத்தை கட்டவில்லை எனில்   மின் இணைப்பை துண்டித்து விடுவோம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  முதலில் இருந்த இரண்டு மின் இணைப்புகளுக்கும் ரூ12000 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் என மின் கட்டணம் வந்ததாக கூறப்படுகிறது. 
இந்த  இணைப்புகளில் மட்டும் தான் போர்வெல், மிக்ஸி, கிரைண்டர் போன்ற அதிக அளவு மின் எடுக்கும் பொருட்கள் ஓடுகிறது என்றும் புதிய இணைப்பில் 6 மின்விசிறி மற்றும் 6 லைட் மட்டுமே இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.  கடந்த ஆண்டே மீட்டர் வேகமாக ஓடுவதாகவும், இதை உடனே மாற்றித்தர வேண்டும் எனம் மனு அளித்ததாக  பூபதிராஜா தெரிவித்துள்ளார். ஆனால் அதை கண்டுகொள்ளாத மின்வாரிய ஊழியர்கள் தற்போது ரூ.61000 கட்டச்சொல்லி வற்புறுத்துகின்றனர்.   இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web