ரூ2000 நோட்டு வச்சிருக்கீங்களா? கவனம்.. இங்கெல்லாம் செல்லாது!!

 
ரூ.2000 ரூபாய்

இந்தியாவில் ரூ2000 நோட்டுக்கள் அக்டோபர் 1ம் தேதி முதல் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனையடுத்து செப்டம்பர் 30ம் தேதிக்குள்   ரூ2000  நோட்டுகளை வங்கியில் செலுத்த வேண்டும் என ஆர்பிஐ அறிவித்திருந்தது.  இந்நிலையில் பொதுமக்கள் வங்கிகள் தவிர ஆன்லைன் பொருட்களை வாங்குவது, பெட்ரோல் பங்குகள், போக்குவரத்து கழகம் என இன்னும் சில பயன்பாட்டிற்கு ரூ2000  நோட்டுகள் வாங்கப்பட்டு வந்தன.

அமேசான் 2000

ஏற்கனவே, அமேசான் நிறுவனம்   செப்டம்பர் 19ம் தேதியோடு கேஷ் ஆன் டெலிவெரியில் ரூ 2000 நோட்டுகள் வாங்குவதை நிறுத்திவிட்டது.அதே போல  கடந்த சில நாட்களுக்கு முன் அரசு போக்குவரத்து கழகம் ரூ2000 நோட்டுகளை வாங்க கூடாது என ஊழியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. அதே போல் அறநிலையத்துறையும் அறிவித்துள்ள நிலையில் உள்ள கோவில் உண்டியல் பணத்தை  செப்டம்பர் 30ம் தேதிக்குள் வங்கியில் செலுத்த வேண்டும்  ,

பேருந்து 2000

அதனை முன்னிட்டு நாளை செப்டம்பர் 29ம்  தேதி   வெள்ளிக்கிழமை கோவில் உண்டியல் கண்காணிப்பாளர் முன்னிலையில் உண்டியல் தொகை திறக்கப்பட்டு எண்ணப்பட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.இதே போல தற்போது பெட்ரோல் பங்க் சங்கமும் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று செப்டம்பர் 28 முதல் ரூ2000  நோட்டுகள் பெட்ரோல் பங்குகளில் வாங்கப்பட  மாட்டாது எனவும்,  ரூ 2000 நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றுங்கள் எனவும் பெட்ரோல் பங்க்குகள் சங்கம் அறிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web