குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 2000/- இன்று முதல் தொடக்கம்!!

 
மாதம் ரூ20000

சமீபத்தில் கர்நாடகாவில் நடைபெற்று முடிந்த  சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது.  பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வழங்கி  தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றது. அதில் கிரக ஜோதி என்னும் இலவச 200 அலகு மின்சார திட்டம்,  கிரகலட்சுமி என்னும் குடும்ப தலைவிகளுக்கு ரூ2000 மாதம் வழங்கும் திட்டம் இவை முக்கியமானவை. அந்த வகையில்   கிரக ஜோதி திட்டம் ஜூலை 1ம் தேதி விரைவில்  தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இல்லத்தரசிகள்

அதன்படி தேர்தலின் போது  காங்கிரஸ் கட்சி அளித்த வாக்குறுதியாக அளித்த ஐந்து திட்டங்களை படிப்படியாக செயல்படுத்தி வருகிறது.  கர்நாடக மாநில அரசின் சார்பில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2000   வழங்கும் கிரகலட்சுமி திட்ட துவக்க விழா இன்று மைசூரில் நடைபெறுகிறது.பிபிஎல் ,ஏபிஎல், ரேஷன் கார்டு வைத்துள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ2000 நிதி உதவி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இல்லத்தரசிகள்

வருமான வரி ,ஜிஎஸ்டி கட்டுபவர்கள் இருந்தால் அவர்களுக்கு பொருந்தாது எனவும்   தெரிவிக்கப்பட்டுள்ளது.  குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2000 வழங்கும் கிரகலட்சுமி திட்டத்தை  வயநாடு எம்பி ராகுல் காந்தி இன்று  தொடங்கி வைக்கிறார் . இத்திட்டத்தின் மூலம் 1.30 கோடி பெண்கள் பயன் பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை