இன்று சபரிமலை நடைத்திறப்பு... காலை முதலே குவியத் தொடங்கிய பக்தர்கள்!!

 
சபரிமலை

சபரிமலை ஐயப்பன் கோவில் உலகப்பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு ஆண்டும்  மண்டல பூஜை, மகர விளக்குப் பூஜை மற்றும் நிறை புத்தரிசி பூஜை, வருடப் பிறப்பு  இவைகளுக்கு திறக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது அத்துடன்  ஒவ்வொரு மாதப் பிறப்பின் போதும் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் வழக்கமான பூஜைகள் நடத்தப்படும்.  

ஐயப்பன் சபரிமலை இருமுடி

அந்த வகையில் ஐப்பசி மாத பூஜைக்காக  இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு தீபாராதனையுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. தந்திரி பிரம்மஸ்ரீ கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையைத் திறந்து வைத்து தீபம் ஏற்றி வைப்பார் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது.  அத்துடன்   அக்டோபர் 18ம் தேதி சபரிமலை மற்றும் மாளிகைபுரம் கோயில்களுக்கான மேல் சாந்திகள் தேர்வு நடைபெற உள்ளது. குலுக்கல் முறையில் சீட்டு எடுக்கும் முறை கடைப்பிடிக்கப்படும்.

சபரிமலை

இதற்காக வைதீவ் என்ற சிறுவனும், நிரூபமா ஸ்ரீ வர்மா என்ற சிறுமியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து நாளை அக்டோபர் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை 5 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும்.  அக்டோபர் 22ம் தேதி இரவு 10 மணிக்கு   ஐயப்பன் கோயிலின் நடை அடைக்கப்படும். வழக்கமான முறையில்  இணைய முன்பதிவு மூலம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக  நிலக்கல் பகுதியில் தற்காலிக முன்பதிவு மையம் இன்று முதல் அக்டோபர் 17ம் தேதி செவ்வாய்கிழமை செயல்படும் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web