சபரிமலை மண்டல-மகர விளக்கு பூஜை தேதிகள் அறிவிப்பு... புதிய மேல்சாந்தி பதவி ஏற்பு!
திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் சபரிமலை அய்யப்பன் கோயிலின் மண்டல, மகரவிளக்கு மற்றும் அடுத்தாண்டு பூஜை சீசனுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, மண்டல பூஜைக்காக சபரிமலை கோயில் வரும் நவம்பர் 16ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். அன்றைய தினம் புதிய மேல்சாந்திகள் தந்திரி முன்னிலையில் மூல மந்திரம் சொல்லி பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்பார்கள். மறுநாள் 17ஆம் தேதி முதல் புதிய மேல்சாந்திகள் பூஜை மற்றும் வழிபாடுகளை நடத்துவார்கள்.

நடப்பாண்டின் மண்டல பூஜை டிசம்பர் 27ஆம் தேதி நடைபெறும். அதன் பிறகு கோவில் நடை மூடப்பட்டு, மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும். 2026ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி மகரவிளக்கு விழா நடைபெறும். ஜனவரி 20ஆம் தேதி பந்தளம் ராஜ குடும்பத்தின் சிறப்பு தரிசனத்துடன் நடை மூடப்படும். அதனைத் தொடர்ந்து மாசி மாத பூஜை பிப்ரவரி 12 முதல் 17 வரை, பங்குனி மாத பூஜை மார்ச் 14 முதல் 19 வரை நடைபெறும் என்று தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

மேலும், 2025-26 ஆண்டுக்கான சபரிமலை மேல்சாந்தியாக பிரசாத் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் சமீபத்தில் கோவை குறிச்சி ஹவுசிங் யூனிட்டிலுள்ள தர்மசாஸ்தா கோயிலுக்கு வருகை தந்து தீபாராதனை வழிபாடு செய்தார். அவரை பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். இதையடுத்து அவர் கூறியதாவது, “ஒரு நிமிடம் கூட ஐயப்பனை தரிசிப்பது பாக்கியம். ஆனால் அவருக்கு சேவை செய்வது புண்ணியம். பிரார்த்தனையுடன் நல்ல முறையில் கடமைகளை ஆற்றுவேன்,” என தெரிவித்தார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
