சச்சின் டெண்டுல்கர் உலகக் கோப்பையின் சர்வதேச தூதுவராக நியமனம்!!

 
சச்சின்

நாளை 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கோலாகலமாக தொடங்க உள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகத்தில் பெரும் எதிர்பார்ப்போடு காத்துக்கிடக்கின்றன. இந்தியா முழுவதும்   10 நகரங்களில் நடைபெற உள்ளது. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் இந்த போடிகளில் கலந்து கொள்கின்றன. நாளை முதல் நாளில்  இங்கிலாந்து நியூசிலாந்துடன் மோத உள்ளது. இந்த போட்டி நாளை அகமதாபாத்தில் மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.  

உலகக்கோப்பை


இன்று இரவே அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடக்க விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்நிலையில், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான சர்வதேச தூதுவராக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.  சச்சின் டெண்டுல்கர் தனது வாழ்க்கையில் 6 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடி சாதனைகளை படைத்துள்ளார்  டெண்டுல்கருடன்  பார்வையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தவும், முன் எப்போதும் இல்லாத வகையில் ரசிகர்களை ஈடுபடுத்தவும் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ், தென் ஆப்பிரிக்காவின் ஏபி டி வில்லியர்ஸ், இங்கிலாந்து முன்னாள் வீரர் இயான் மோர்கனையும் தூதுவர்களாக ஐசிசி நியமித்துள்ளது.  

மிதாலிராஜ்
அதே போல், ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச், இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன், நியூசிலாந்தின் ராஸ் டெய்லர், சுரேஷ் ரெய்னா, முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் மற்றும் பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் முகமது ஹபீஸ் ஆகியோரையும் இடம் பெறச்செய்யலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web