சோகம்... பைக் ஓட்டிச் சென்ற 9ம் வகுப்பு மாணவன் பலி!

 
திவாகர்

திருப்பத்தூரில், 9ம் வகுப்பு மாணவன் பைக் ஓட்டிச் சென்ற நிலையில், பள்ளிப்பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

18 வயது நிரம்பாதவர்களுக்கு தனியே வாகனங்களை இயக்க தராதீர்கள் என்றும், அப்படி லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால், பெற்றோர்களும் தண்டிக்கப்படுவார்கள் என்றும் போலீசார் பல முறை எச்சரித்து வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் பாரதிதாசன் நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மகன் திவாகர் (14). தனியார் பள்ளி ஒன்றில் 9ம் வகுப்பு பயின்று வந்த திவாகர், தனது இருசக்கர வாகனத்தில் காய்கறி வாங்க தனது வீட்டின் அருகே உள்ள சக்தி நகர் பகுதியில் உள்ள சந்தைக்கு செல்வதற்காக அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர் அஜய் என்பவருடன் புதுப்பேட்டை சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.

Accident

அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பகுதியில் உள்ள வேளாங்கண்ணி மேல்நிலைப் பள்ளியின் தனியார் பேருந்து திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பயிலும் மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு புதுப்பேட்டை சாலை வழியாக சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக நேர் எதிரே வந்த  திவாகர் மற்றும் அஜய் வந்த இருசக்கர வாகனத்தின் மீது பள்ளிப் பேருந்து மோதியதில் திவாகர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார்.

நல்வாய்ப்பாக சிறு காயங்களுடன் அஜய் உயிர் தப்பினார். இந்த நிலையில் பேருந்து ஓட்டுநர் பள்ளி பேருந்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடி உள்ளார். பின்னர் பள்ளி நிர்வாகத்திற்கு இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டு வேறு ஒரு பேருந்து வரவழைக்கப்பட்டு பள்ளி மாணவர்கள் அங்கிருந்து பள்ளிக்குச் செல்லப்பட்டனர்.

Tirupattur Taluk PS

இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தினர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  போலீசார் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவைத்து உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திவாகர் உயிரிழந்த நிலையில் பெற்றோர்கள் கதறி அழுத சம்பவம் காண்போர் நெஞ்சை கண்கலங்க செய்தது.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web