திருப்பதி சென்று திரும்பிய போது சோகம்... கார் விபத்தில் 3 பேர் உடல் நசுங்கி பலி!

 
3 பேர்
திருப்பதி சென்று விட்டு திரும்பிய போது, திண்டிவனம் அருகே தறிக்கெட்டு ஓடிய கார் மோதிய விபத்தில் 3 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள பேரணி பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன் (32). அவரது நண்பர் பூபாலன் (49). இவர்கள் இருவரும்  திருப்பதி கோவிலுக்கு சென்று விட்டு நள்ளிரவில் திண்டிவனத்தில் நிறுத்தி  வைத்திருந்த தங்களது இருசக்கர வாகனத்தில் பேரணி கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.

Accident

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விளங்கம்பாடி என்ற இடத்தில் பெட்ரோல் பங்க் அருகே செல்லும் போது திண்டிவனத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற கார் அதிவேகமாக நடந்து சென்ற ஒருவர் மீது மோதியுள்ளது அதில் அந்த நபர் தூக்கி வீசப்பட்ட நிலையில், அடுத்ததாக இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மூன்று பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர

விபத்து குறித்து மயிலம் காவல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த, காவல்துறையினர் மூவரின் உடலையும் மீட்டு பிரத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய கார் சாலையோர பள்ளத்தில் கவிழுந்த நிலையில் ஓட்டுனர் தலைமறைவாகி உள்ளார்.

Mailam PS

இந்த விபத்து குறித்து மயிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த விபத்தால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் நடந்து சென்றபோது கார் மோதி உயிரிழந்தவர் யார் என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web