பிறந்தநாள் விழாவில் சோகம்.. கண் மை டப்பாவை விழுங்கிய குழந்தை பரிதாப பலி!
மதுரையை சேர்ந்தவர் சூர்ய பிரகாஷ். இவர் தபால் துறையில் பணியாற்றி வருகிறார். சிவகங்கை காளவாசல் பகுதியில் உள்ள இவரது இவரது மனைவி சகோதரியின் குழந்தையின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதற்காக வந்திருந்தார். இந்நிலையில், சூரிய பிரகாஷின் ஒரு வயது மகன் தரண் தேவாவுக்கு அவரது தாய் முகத்திற்கு பவுடர் அடித்து பொட்டு வைத்துள்ளார். அப்போது, குழந்தையின் தாய் கிச்சனுக்கு சென்றபோது, குழந்தை அருகில் இருந்த கண் மை டப்பாவை எடுத்து வாயில் போட்டது. திடீரென்று குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, தாய் பார்த்தபோது, குழந்தையின் வாயில் கண் மை டப்பா ருப்பதை உணர்ந்தார். குழந்தையின் தாய் அந்த டப்பாவை வெளியே எடுக்க முற்பட்ட போது, எதிர்பாராதவிதமாக குழந்தை டப்பாவை விழுங்கியது. இந்த நிலையில் குழந்தையின் வாயில் இருந்து ரத்தம் வர, சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட ஒரு வயது குழந்தைகண் மை டப்பாவை விழுங்கி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!