பரபரப்பு... ஆற்றில் கவிழ்ந்த கார்... சைதை துரைசாமி மகன் மாயம்... ஓட்டுனர் பலி.. !

 
வெற்றி துரைசாமி

 சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி. இவர் இமாச்சல் பிரதேசத்தில் காரில்  சென்று கொண்டிருருந்த   போது கார் சட்லஜ் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  இந்த பயங்கரவிபத்தில்  காரின் ஓட்டுநர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், ஆனால், வெற்றி துரைசாமியைக் காணவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. 
சைதை துரைசாமி அதிமுக முன்னாள் எம்எல்ஏவும் சென்னை முன்னாள் மேயரும் ஆவார்.

வெற்றி துரைசாமி

இவரது மகன் காரில்  இமாச்சல பிரதேச மாநிலத்திற்குச் சுற்றுலா சென்றுள்ளார். அந்த மாநிலத்தின் கசாங் நாளாலா தேசிய நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டிருந்த  போது அவருடைய கார் சட்லஜ் நதியில் விழுந்து விபத்து ஏற்பட்டது.  இந்த விபத்தில் கார் ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  

வெற்றி துரைசாமி

வெற்றியுடன் சுற்றுலாவுக்குச் சென்றிருந்த திருப்பூரை சேர்ந்த அவரது நண்பர் கோபிநாத் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். கவலைக்கிடமான நிலையில்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  ஆனால், கார் விபத்து ஏற்பட்டது முதல்  சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியை மட்டும் காணவில்லை எனவும்,  அவரை மீட்கும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web