தமிழகத்தில் ரேஷன்கடைகளில் மதுபானம் விற்பனை... இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணை!

 
மதுபானம்
ஏற்கெனவே தமிழகம் போதை மாநிலமாக தள்ளாடிக் கொண்டிருப்பதாக பேச்சு பொதுமக்களிடையே எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக, சூப்பர் மார்க்கெட் மற்றும் ரேஷன் கடைகள் மூலமாக மதுபான விற்பனை மேற்கொள்ள அனுமதிக்க கோரியும், கள் விற்பனைக்கு விதித்த தடையை நீக்கக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

ரேஷன் சர்க்கரை 
சென்னையைச் சேர்ந்த ஐடி ஊழியர் முரளிதரன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், “டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானம் சப்ளை செய்யும் நிறுவனங்கள், பெரும்பாலும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு சொந்தமானதாக உள்ளதாகவும், இதனால் டாஸ்மாக் நிர்வாகம் குறிப்பிட்ட சில பிராண்ட் மதுபானங்கள் மட்டுமே விற்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. 

ரேஷன்

மதுபான பாட்டில்களில் அச்சிடப்பட்டிருக்கும் விற்பனை விலையை விட கூடுதல் விலை கொடுக்க வேண்டாம் என எல்லா டாஸ்மாக் கடைகளிலும் அறிவிப்பு பலகை வைக்க உத்தரவிட வேண்டும். கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க, சில கட்டுப்பாடுகளுடன் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும்  மதுபானங்களை நாடு முழுவதும் உள்ள நிறுவனங்களிடம் இருந்து வாங்கி, சூப்பர் மார்க்கெட்கள், ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறப்பட்டுள்ளது.  இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web