11 நாட்களுக்கு இறைச்சி, மீன் விற்பனைக்குத் தடை.. வடமாநிலங்களில் களைக்கட்டும் நவராத்திரி திருவிழா!

 
இறைச்சி


வட மாநிலங்களில் நேற்று நவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கிய நிலையில் வரும் அக்டோபர் 2ம் தேதி வரை  11 நாட்களுக்கு இறைச்சி, மீன் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இறைச்சி

நாடு முழுவதும் நேற்று நவராத்திரி துவங்கிய நிலையில், குஜராத், உத்தரப் பிரதேசம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் வெகு விமர்சையாக நவராத்திரி விழாக்கள் நடைபெற்று வருகிறது. நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் நடனம், வகைவகையான உணவு பரிமாறுதல், புத்தாடைகள் என விதவிதமாக கொண்டாடப்படும்.

இந்நிலையில், நவராத்திரி விழாவின் போது இறைச்சி, மீன், முட்டை விற்பனைக்கு தடை விதிப்பதாக போபால் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து போபால் துணைப் பிரிவு நீதிபதி திவ்யா படேல் கூறுகையில், ‘நவராத்திரி திருவிழாவைக் கருத்தில் கொண்டு அக்டோபர் 2ம் தேதி வரை 11 நாட்களுக்கு இந்நகரில் இறைச்சி, மீன் மற்றும் முட்டை விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்தார்.

மீன் இறைச்சி தூத்துக்குடி துறைமுகம்

இதற்கிடையில், குருகிராமில் விஸ்வ இந்து பரிஷத் நவராத்திரியின் போது அனைத்து இறைச்சி மற்றும் மீன் கடைகளையும் மூடக் கோரி துணை ஆணையரிடம் விண்ணப்பித்துள்ளது. கோவில்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகிலுள்ள கடைகள், பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகவும், குடிமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதாகவும் அந்த விண்ணப்பத்தில் கூறப்பட்டுள்ளது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?