தமிழகத்தில் ORSL, ORS FIT பவுடர்கள் விற்பனைக்கு தடை! மருந்து கடைகளில் பறிமுதல் செய்யவும் உத்தரவு!

 
ஓஆர்எஸ் உப்பு கரைசல்

ஓஆர்எஸ் என்ற பெயரில் போலியான பானங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற நோய்களின் காரணமாக உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்பட்டால் அதனை சரிசெய்ய ஓஆர்எஸ் (Oral Rehydration Solution) வழங்கப்படுகிறது. இது உலக சுகாதார அமைப்பும், தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனமும் அங்கீகரித்த மருத்துவ கரைசல் ஆகும்.

ஆனால் சமீப காலமாக “ஓஆர்எஸ்” என்ற பெயரில் அனுமதியின்றி விற்பனை செய்யப்படும் போலி பானங்கள் பல மாநிலங்களில் விற்பனையாகி வருகின்றன. இதனால் மத்திய அரசு கடந்த வாரம் அவற்றை தடை செய்தது. அதனைத் தொடர்ந்து தமிழக சுகாதாரத் துறை, மாநிலத்திலும் இதே தடை அமல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

ஓஆர்எஸ் உப்பு கரைசல்

இதன்படி “ORSL”, “ORSL PLUS”, “ORS FIT” என்ற பெயர்களில் விற்பனை செய்யப்படும் பானங்கள் முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளன. மாவட்ட மருந்தகங்கள், கடைகள் ஆகியவற்றில் விற்பனை நடைபெறுகிறதா என ஆய்வு செய்து, போலி ஓஆர்எஸ் பொருட்களை பறிமுதல் செய்ய மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் உலக சுகாதார அமைப்பின் பெயர் மற்றும் அங்கீகாரம் தெளிவாக அச்சிடப்பட்ட உண்மையான ஓஆர்எஸ் மட்டுமே விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஓஆர்எஸ் உப்பு கரைசல்

சுகாதாரத் துறை எச்சரிக்கையில் கூறுகையில், “ஓஆர்எஸ் என்பது குளுக்கோஸ், சோடியம், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளின் கலவையாகும். இது தூய நீரில் கரைத்து உடலில் இழந்த நீர்ச்சத்தை மீட்டெடுக்க உதவுகிறது. ஆனால் வணிக நன்மைக்காக இதே பெயரில் விற்பனை செய்யப்படும் பானங்கள் உடல்நலத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.”

ஓஆர்எஸ் உப்பு கரைசல்

மேலும், பொதுமக்கள் தாங்களே வீட்டிலேயே உப்பு, சர்க்கரை கலவையால் ஓஆர்எஸ் கரைசலை தயாரித்து 24 மணி நேரத்துக்குள் பயன்படுத்தலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. போலி ஓஆர்எஸ் பானங்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?