செம.. ரேஷன் கடைகளில் ரூ10க்கு தண்ணீர் பாட்டில் விற்பனை... !!

 
ரேஷனில் தண்ணீர்

இந்தியா முழுவதும் ரேஷன் கடைகளில் மானிய விலையில் உணவு தானிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அத்துடன்  சீரகம், மிளகு, சிறு தானியங்களும் மானிய விலையில்  விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கேரளாவில்  ரேஷன் கடைகளில் தண்ணீர் பாட்டில் விற்பனை செய்யும்  திட்டம்  2020 ல்  செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது. சாதாரணமாக வெளிச்சந்தையில் ரூ20 க்கு ஒரு லிட்டர் குடிநீர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  ரேஷன் கடைகளில்  11 ரூபாய்க்கு விற்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதை அப்போது நடைமுறைப்படுத்தும் சூழல் உருவாகவில்லை. தற்போது அத்திட்டத்தை செயல்படுத்த பல்வேறு வகையான செயல்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன.  

தண்ணீர்
இந்நிலையில் தற்போது ரூ10  க்கு ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் விற்பனை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கேரள நீர்ப் பாசன உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் சார்பில் தயாரிக்கப்படும் ஹில்லி அக்வா என்ற குடிநீர் பாட்டில்  ரூ8க்கு   ரேஷன் கடைகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. அதனை  ரூ2 லாபம் பெற்று  ரேஷன் கடைகளில்  மக்கள் அதை ரூ10 க்கு பெற்றுக் கொள்ளலாம்.இதனால் மக்களுக்கு குறைந்த விலையில் தண்ணீர் பாட்டில் கிடைக்கும், ரேஷன் கடை ஊழியர்களுக்கு பாட்டில் ஒன்றுக்கு ரூ 2  கமிஷன் கிடைக்கும். ரேஷன் அட்டைதாரர்கள் மட்டுமல்லாமல் யார் வேண்டுமானாலும் ரூ10  கொடுத்து இந்த தண்ணீர் பாட்டிலை பெற்றுக் கொள்ளலாம்.

தண்ணீர்

கார்த்திகை மாதம் சபரிமலைக்கு அதிகளவில் பக்தர்கள் செல்கின்றனர். இந்த சமயத்தில் சுற்றுலாப் பயணிகள், சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக  முதற்கட்டமாக கோட்டயம், இடுக்கி மற்றும் பத்தினம்திட்டா மாவட்ட ரேஷன் கடைகளில் தொடங்கப்பட்டுள்ளது. வெளிச் சந்தைகளில் இந்த ஹில்லி அக்வா குடிநீர் பாட்டில்கள் ரூ 15  க்கு விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தண்ணீர் பாட்டிலுடன் ரேஷன்கடைகள் மூலம் மக்களுக்கு கூடுதல் பொருள்கள் விற்பனை செய்யவும்  வங்கி மற்றும் பிற ஆன்லைன் சேவைகளை வழங்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் ரேஷன் கடைகளை கே-ஸ்டோர் என பெயர் மாற்றவும் கேரள அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக மாநிலத்தில் உள்ள 108 ரேஷன் கடைகள் கே - ஸ்டோர்களாக மாற்றப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web