காதலருடன் கட்டியணைத்தபடி சமந்தா... வைரலாகும் புகைப்படம்!
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, தற்போது சினிமாவிலிருந்து சிறிது இடைவெளி எடுத்துள்ளார். இதற்கிடையில், புதிதாக தனது நறுமண திரவிய (பர்ஃப்யூம்) பிராண்டை அறிமுகப்படுத்தி, தனித்தொழிலில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் நடந்த பிராண்டு அறிமுக விழாவில் எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

தமிழில் மாஸ்கோவின் காவிரி, பானா காத்தாடி போன்ற படங்களில் நடித்த சமந்தா, தெலுங்கு சினிமாவில் ஈ மாயா சேசவே மூலம் பெரிய பிரேக் பெற்றார். 2017-ல் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட அவர், 2021-ல் விவாகரத்து செய்துகொண்டார். அதன் பிறகு சினிமாவிலிருந்து ஓய்வு எடுத்த சமந்தா, உடல்நல பிரச்சினைகளை சரிசெய்து, வெளிநாட்டுப் பயணங்களிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் கவனம் செலுத்தி வந்தார்.

தற்போது, சமந்தா இயக்குநர் ராஜ் நிடிமொருவுடன் நெருக்கமாக பழகிவருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. சமீபத்திய நிகழ்வில் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படம், அதிலும் அவர்கள் நெருக்கமாக நிற்கும் போஸ் இணையத்தில் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் குறித்து நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருவதால், சமந்தா மீண்டும் பரபரப்பின் மையமாகியுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
