வீடியோ.... திருப்பதியில் ஜான்வி கபூர் காதலருடன் சாமி தரிசனம்!!

நடிகை ஸ்ரீதேவி போனிகபூர் தம்பதியின் மகளும், இந்தி திரைப்பட நடிகையுமான ஜான்வி கபூர் திருப்பதி ஏழுமலையானை காதலனுடன் இன்று தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தரிசனத்துக்கு முன்னேற்பாடுகள் செய்து கொடுத்து ரங்கநாயக மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கௌரவித்தனர்.
#WATCH | Andhra Pradesh | Actress Janhvi Kapoor visits Sri Venkateswara Swami Temple in Tirumala to offer prayers. pic.twitter.com/zbOHYkcBfH
— ANI (@ANI) August 28, 2023
வருடம் தோறும் நடிகை ஜான்வி கபூர் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.கடந்த வருடத்தில் தங்கை குஷி மற்றும் காதலனுடன் வந்தது வைரலாகியது.
அதை போல இந்த வருடமும் திருமலைக்கு வந்திருந்த ஜான்வி, பாவாடை தாவணியில் சாமி தரிசனம் செய்துள்ளார். ஜான்வி கபூருடன் காதலர் ஷிகார் பஹாரியாவும் உடன் இருந்தார். பாலிவுட்டில் பிசியாக நடித்து வரும் நடிகை ஜான்வி, அடுத்து ஜூனியர் என்.டி.ஆருடன் தெலுங்கு திரையுலகிலும் அறிமுகமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!