ஜப்பானின் முதல் பெண் பிரதமரானார் சனே தகைச்சி... குவியும் வாழ்த்துகள்!

 
ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி

ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி (64) அந்நாட்டின் கீழவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு உலக தலைவர்களிடம் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

ஜப்பான்

ஜப்பான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முன்னாள் பிரதமர் ஷிகெரு இஷிபா தலைமையிலான லிபரெல் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை இழந்ததால், இஷிபா தனது பிரதமர் பதவியை கடந்த மாதம் ராஜிநாமா செய்தார்.

அதன்பின்னர், லிபரெல் ஜனநாயகக் கட்சியின் புதிய தலைவராக அந்நாட்டின் முன்னாள் அமைச்சர் சனே தகைச்சி, உள்கட்சி வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். லிபரெல் ஜனநாயகக் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்ற சனே தகைச்சியை, ஜப்பான் பிரதமராக தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் இன்று நடத்தப்பட்டது.

ஜப்பான் சனே தகைச்சி

இந்த வாக்கெடுப்பில் 465 உறுப்பினர்கள் பங்கேற்ற நிலையில், 237 வாக்குகளைப் பெற்று ஜப்பானின் முதல் பெண் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, ஜப்பான் அரசரை சந்தித்து வாழ்த்து பெற்ற பிறகு, ஜப்பானின் 104-வது பிரதமராகவும் முதல் பெண் பிரதமராகவும் சனே தகைச்சி பதவியேற்கவுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?