மணல் லாரி கவிழ்ந்து பரபரப்பு ... பைக்கை மோதாமல் தவிர்க்க முயற்சித்த போது விபரீதம்!
சென்னையில் இன்று காலை அக்கரை அருகே மணல் லாரி கவிழ்ந்ததில் பரபரப்பு ஏற்பட்டது. திடீரென குறுக்கே வந்த பைக்கை மோதாமல் தவிர்க்க முயன்றபோது இந்த விபத்து நடந்தது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி இந்திரா நகரைச் சேர்ந்த பிரேம்குமார் (26) என்பவர் ஓட்டிய மணல் லாரி, கிழக்கு கடற்கரை சாலையில் சென்னையிலிருந்து அக்கரை நோக்கி வந்தது. ஈஞ்சம்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, உள்புற சாலையில் இருந்து திடீரென ஒரு பைக் வந்தது. அதன்மீது மோதாமல் இருக்க பிரேம்குமார் பிரேக் போட்டபோது, லாரி நிலைதடுமாறி சாலையோரம் நிறுத்தியிருந்த ஆட்டோ மீது மோதியதில் அது கடுமையாக சேதமடைந்தது.

ஆட்டோவில் இருந்த மூவர் அப்போது இறங்கி சாலையோரத்தில் பேசிக் கொண்டிருந்ததால் உயிர் தப்பினர். லாரி கவிழ்ந்ததில் அதிலிருந்த மணல் சாலையில் சிதறி விழுந்ததால், இசிஆர் சாலையில் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் ஜேசிபி மூலமாக லாரியையும் மணலையும் அகற்றி போக்குவரத்தை சீர்படுத்தினர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
