சசிகலா வழக்கு தள்ளுபடி... அதிமுகவை முழுமையாக கைப்பற்றினார் எடப்பாடி!

 
எடப்பாடி

அதிமுகவை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முழுமையாக கைப்பற்றினார். ஓபிஎஸ் தொடுத்து வந்த சட்ட ரீதியிலான போராட்டங்கள் முடிவுக்குவ் அந்து, அதிமுகவின் கட்சி சின்னத்தையும், கொடியையும் பயன்படுத்துவதற்கு ஓபிஎஸ்ஸூக்கு நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில், அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கம் செய்தது செல்லும் என சென்னை  உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலமாக யாருடைய இடைஞ்சலும் இல்லாமல், அதிமுகவை முழுமையாக கைப்பற்றி, வரும் பாராளுமன்ற தேர்தலை சந்தித்து, வழிநடத்தவுள்ளார் எடப்பாடி.

முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலாவும், துணை பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரனும் அதிமுக பொதுக்குழுவில் தோ்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலா, தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கம் செய்தும், கட்சியில் ஒருங்கிணைப்பாளார், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சென்னை உயர் நீதிமன்றம்

இதையடுத்து, பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கிய தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி வி.கே. சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி கட்சியின் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை ஏற்று, சசிகலாவின் வழக்கை உரிமையியல் நீதிமன்றம் நிராகரித்து கடந்த 2022 ஏப்ரலில் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து சசிகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில், ‘செப்டம்பர் 12, 2017-ம் தேதி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளா் பதவியில் இருந்து என்னை நீக்கியது சட்டவிரோதமானது; என்னையே அப்பதவியில் நீடிப்பதாக அறிவிக்க உத்தரவிடவேண்டும்’ என சசிகலா தரப்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

சசிகலா

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், செந்தில்குமார் அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அதில் சசிகலாவை அதிமுகவிலிருந்து நீக்கியது செல்லும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், தன் நீக்கியது செல்லாது என்று  உத்தரவிடக்கோரிய சசிகலாவின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web