இல்லத்தில் சகல செல்வங்களும் சேர சத்ய நாராயணா பூஜை செய்யும் முறை!

நமது பாரம்பரியத்தில் ஆதி கடவுள் சூரியனும், சந்திரனுமே. இவைகளையே தம்மை ரட்சிக்கும் கடவுளாக பண்டைய மக்கள் வழிபாடு செய்து வந்தனர். கடவுளை வழிபட எல்லா நாட்களும் உகந்தவையே. இருந்த போதிலும் பௌர்ணமி தினங்களில் நம்முடைய வழிபாடு அதிஉன்னதமான பலன்களை தரும். இந்த நாளில் செய்யப்படும் சத்ய நாராயண விரத பூஜை வாழ்வில் ஏற்றத்தையும், நிறைந்த செல்வத்தையும் தரும் என்பது ஆன்மிக அன்பர்களின் வாக்கு.
இந்த பூஜையின் சிறப்பம்சத்தை ஸ்ரீ மஹாவிஷ்ணுவே நாரதரிடம் எடுத்துரைத்துள்ளார் என்பது தான். இந்த பூஜையை புரோகிதர் வைத்து செய்வது சிறப்பு என்றாலும் இயலாதவர்கள் நாமாகவே வீட்டிலும் செய்யலாம்.
இந்த பூஜையை பௌர்ணமி தினத்தில் செய்ய முடியாதவர்கள் அமாவாசை, அஷ்டமி, துவாதசி, ஸங்கராந்தி, தீபாவளி, ஞாயிறு, திங்கள், வெள்ளி, புரட்டாசி மாத சனிக்கிழமைகள் அல்லது ஜாதகத்தில் சந்திரன் பலம் உள்ள நாட்களில் செய்து கொள்ளலாம். ஸ்ரீ சத்ய நாராயண பூஜையை செய்தால் விஷ்ணு பகவானின் அருளை பரிபூரணமாக பெறலாம். இதனால் வீட்டின் தரித்திரம், ஏழ்மை விலகி செல்வம் சேரும். எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி பெறலாம்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை
செயற்கை காலுடன் நடக்கும் யானை!! வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ!!