உடனே அப்ளை பண்ணுங்க... எஸ்பிஐ வங்கியில் 103 வேலைவாய்ப்புகள் !
பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) ஒப்பந்த அடிப்படையில் சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 103 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதியானவர்கள் இந்த மாதம் 17ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என வங்கி அறிவித்துள்ளது.

இந்தப் பணிகளில் Head (Product, Investment & Research), Zonal Head (Retail), Regional Head, Relationship Manager-Team Lead, Investment Specialist, Investment Officer, Project Development Manager (Business) மற்றும் Central Research Team (Support) உள்ளிட்ட பதவிகள் உள்ளன. சம்பளங்கள் ஆண்டுக்கு ரூ.20.60 லட்சம் முதல் ரூ.1.35 கோடி வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க தகுதியானவர்கள் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். வயது வரம்பு பணியிடத்தைப் பொறுத்து 25 முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை நேர்முகத் தேர்வு அல்லது காணொளி நேர்முகத் தேர்வாக இருக்கும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை; மற்றவர்கள் ரூ.750 கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பங்கள் எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
