மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனர்களை இணைக்க திட்டம் !

 
மகளிர் உரிமை தொகை

திமுக தேர்தல்பிரச்சாரத்தில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ1000 வழங்கப்படும் என அறிவித்திருந்தது. அதனை செயல்படுத்தும் வகையில் செப்டம்பர் 15ம் தேதி அறிஞர் அண்ணா பிறந்தநாளில் காஞ்சிபுரத்தில் இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில் சேர விண்னப்பங்கள் வீடுவீடாக வழங்கப்பட்டன. அவை பரிசீலிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பங்களுக்கு அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் புதிய ரேஷன்கார்டுகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு   கடந்த ஓராண்டு காலமாக புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படாமல் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மகளிர் உரிமைத் தொகை


கூட்டுறவுத் துறை  ஆலோசனைக் கூட்டம் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடத்தப்பட்டது.  இதில் உரையாற்றிய   அமைச்சர் பெரிய கருப்பன் இந்த ஆண்டு வழங்கப்பட்ட விவசாயக் கடன், சுய உதவிக்குழு கடன், டாப்செட்கோ கடன், டாம்கோ கடன், மாற்றுத் திறனாளிகளுக்கான கடன், தாட்கோ கடன், சிறு வணிக கடன்   குறித்த அறிவிப்புக்களை வெளியிட்டார்.  இதன் பிறகு செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அதில் மத்திய அரசு பாரத் அரிசி, பாரத் ஆட்டா, குறைந்த விலை மளிகைப் பொருட்களை  அறிமுகப்படுத்தியுள்ளது. இதே போல்  தமிழக அரசுக்கும் திட்டம் உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது.   “சில நேரங்களில் மத்திய அரசும் அத்தியாவசியப் பொருட்களை தருவார்கள்.

மகளிர் உரிமை தொகை

அது உணவுத் துறையின் மூலமாக கொள்முதல் செய்யப்பட்டு, கூட்டுறவுத் துறைக்கு வழங்கப்படும்.  தமிழகத்தில் இல்லத்தரசிகள் பலர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்காக பலர் புதிதாக குடும்ப அட்டைகளுக்கு விண்ணப்பித்துள்ளனர்.  தகுதியில்லாதவர்களுக்கு போய் சேர்வதை தடுக்கவே சில காலமாக புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படவில்லை.  சில ஆய்வுகளுக்கு பிறகு விரைவில் ரேஷன்கார்டுகள்  வழங்கப்படும் என பதிலளித்தார்.   மேலும் தமிழகம்  முழுவதும் மேலும் சில லட்சம் பேர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளனர். விரைவில் புதிய பயனர்கள் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்படும் எனக் கூறியுள்ளார்.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web