அண்ணனயாவது நல்லா பாத்துக்கோங்க... கடிதம் எழுதி பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை... !!

 
sat

இன்றைய இளம் தலைமுறையினருக்கு கேட்பது உடனே கிடைத்துவிட வேண்டும் . இல்லையெனில் பெரும் மன அழுத்தத்திற்கு ஆளாகி  பல விபரீத முடிவுகளையும் எடுத்து விடுகின்றனர். பிரச்சனைகளையும், சூழ்நிலைகளையும் சரியாக புரிந்து கொண்டு போராடும் திறனற்ற சோம்பேறித்தனமான தலைமுறையை உருவாக்கி வருகிறோம் என்பது நிதர்சனமான உண்மை.
 தேனி மாவட்டம் போடி கீழத்தெரு பேச்சியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி , ஜெயா .   இவர்களுக்கு 2   முத்து,பாலாஜி என  இரு மகன்கள்.  
 தந்தை ராமகிருஷ்ணன் கூலி வேலை செய்து வருகிறார்.

ரயில்

 

தாய்  ஜெயா ஏலக்காய் கடையில் பணிபுரிந்து வருகிறார்.   இளைய மகன் பாலாஜி 9ம் வகுப்பு தேர்ச்சி பெறாததால்   வீட்டில் இருந்தார். தினமும் அப்பகுதியில் உள்ள  போடி  ரயில் நிலையத்தை சுற்றிசுற்றி விளையாடி வந்தார். நீண்ட வருடங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த போடி ரயில் சேவை தொடங்கியது.  ரயில் சேவை துவங்கியதிலிருந்து ரயில் பயணிகள் குழந்தைகளுடன் சென்று வருவதை தினமும் பார்த்து தானும் செல்லவேண்டும் என ஆசைப்பட்டான். அதனை பெற்றோரிடம் தெரிவித்தார்.  தமது பெற்றோரும் சென்னை. மதுரைக்கு அழைத்து செல்ல அடிக்கடி அவர்களிடம் வற்புறுத்தி வந்துள்ளார்.ரயில் நிலையத்தில் ரயில் பயணிகள் செல்வதை கண்டு தானும்  பெற்றோருடன் பயணிக்க வேண்டும் என்ற ஏக்கமும் நாளுக்கு நாள் வளர்ந்தது.  

 


பெற்றோர்கள் இருவரும்தினமும்   கூலி வேலைக்கு சென்று விடுவதால் பாலாஜியின் ஆசையை நிறைவேற்ற முடியவில்லை. அவர்களால் புரிந்து கொள்ளவும் முடியவில்லை.  இந்நிலையில் அக்டோபர் 9ம் தேதி  திங்கட்கிழமை பெற்றோர் பணிக்கு சென்றதும்   பாலாஜி ரயில் மீது தன் கொண்ட ஏக்கத்தை உருக்கமான கடிதமாக எழுதி வைத்து அண்ணனையாவது நன்றாகப் பார்த்து கொள்ளுங்கள் என கூறி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.   தனது பணியை முடித்து வீட்டை திறந்து பார்த்த போது சேலையால் தனது மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு தாய் கதறித்துடித்தார்.  

ஆம்புலன்ஸ்

அதிர்ச்சி அடைந்து மயங்கி விழுந்தார். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு  போடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 
விசாரணையில் மாணவன் கடிதம் எழுதி வைத்ததை கைப்பற்றி பெற்றோர்களுடன் ரயில் பயணம் செய்ய முடியாத ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யபட்டது. பாலாஜியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது அடக்கம் செய்யப்பட்டது. ரயில் மீது கொண்டுள்ள ஏக்கம் காரணமாக மாணவன் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு போடி பகுதியில் பெரும் அதிர்ச்சியையும்,  சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web