ரயில்வே கேட்டில் 40 மாணவர்களுடன் சிக்கிக்கொண்ட பள்ளி பேருந்து.. அதிவேகமாக வந்த ரயில்.. அடுத்து நடந்த திகில் சம்பவம்!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் கபர்கேடா பகுதியில் நேற்று மாலை 4 மணியளவில் பள்ளி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்தில் சுமார் 40 மாணவர்கள் இருந்தனர். அந்தப் பகுதியில் உள்ள ரயில்வே கிராசிங் அருகே பேருந்து வந்தபோது சிவப்பு சிக்னல் விழுந்தது. ஆனால் கேட் மூடும் முன் தண்டவாளத்தை கடக்க டிரைவர் பேருந்தை ஓட்டினார். ஆனால், பஸ் தண்டவாளத்தை கடக்கும் முன், ரயில்வே கேட் மூடப்பட்டது. இதனால், ரயில்வே கடவுப்பாதையின் நடுவே பேருந்து சிக்கியது. அப்போது, மத்தியப் பிரதேச மாநிலம் சின்வாரா பகுதியில் இருந்து நாக்பூர் இத்வாரி நோக்கி பயணிகள் விரைவு ரயில் வந்து கொண்டிருந்தது.
பேருந்தில் இருந்த மாணவர்கள் உதவி கேட்டு கூச்சலிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தார். நிலைமையை உணர்ந்த பொதுமக்கள் உடனடியாக ரயில் தண்டவாளத்தை நோக்கி தண்டவாளத்தில் ஓடினர். டிரைவரும், ரயில்வே கேட் இடையே தண்டவாளத்தை விட்டு பஸ்சை ஓரத்தில் நிறுத்த முயன்றார். மேலும் தண்டவாளத்தில் பேருந்து சிக்கியது குறித்து கேட் கீப்பர் வாக்கி டாக்கி மூலம் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இந்நிலையில், தூரத்தில் வந்து கொண்டிருந்த போது பலர் தண்டவாளத்தில் நிற்பதை என்ஜின் டிரைவர் கவனித்தார். ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்பதை உணர்ந்த அவர், ரயிலை உடனடியாக பிரேக் போட்டு நிறுத்தினார்.
ரயில் நிலையத்திலிருந்து சிறிது தூரத்தில் ரயில் நின்றது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு 40 மாணவர்கள் உயிர் தப்பினர். இதையடுத்து அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். ரயில்வே கேட் திறக்கப்பட்டு, பஸ் உடனடியாக தண்டவாளத்தில் இருந்து இறக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து கபர்கேடா காவல் நிலைய அதிகாரி தானாஜி ஜலக் கூறுகையில், "சிவப்பு சிக்னலை பார்த்து, ரயில்வே கேட் தானாக மூடும் என தெரிந்தும் டிரைவர் பஸ்சை ஓட்டினார். எனவே இந்த சம்பவத்தில் டிரைவர் தான் தவறு. டிரைவர் பள்ளி குழந்தைகளை காப்பாற்ற பஸ்சை தண்டவாளத்தின் ஓரத்தில் நிறுத்தியுள்ளார்,'' என்றார்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா