அக்டோபர் 15 வரை பள்ளிகள் மூடல்... சின்னாபின்னமான சிக்கிம்!!

 
பள்ளிகள் மூடல்

திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பால் வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் கடந்த சில நாட்களாக வானம் பொத்துக் கொண்டு ஊற்றுகிறது. இதனால் டீஸ்டா ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து ஆற்றை ஒட்டியுள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   ஆற்றை ஒட்டிய சாலைகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளன. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

மேகவெடிப்பு
 இந்த வெள்ளம் கேங்டாக், மங்கன், பாக்கியாங், நாம்சி ஆகிய 4 மாவட்டங்களில் புகுந்து கடும் சேதங்களை ஏற்படுத்தியது.   14 பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதனால் போக்குவரத்து முடங்கி  மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.  டீஸ்டா நதி வெள்ளம் பாய்ந்துள்ள பகுதிகளில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

விடுமுறை

சிக்கிமில் மேலும் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சிக்கிம் மாநிலத்தில் அக்டோபர் 15  வரை பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்படும் என சிக்கிம்  மாநிலத்தின் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. எதிர்பாராத மழை மற்றும் வெள்ள பாதிப்புகள் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web