டிசம்பர் 27ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

 
விடுமுறை

மார்கழி மாதம் திருவாதிரை நாளில் சிவ ஆலயங்களில்  நடராஜர் அபிஷேகம் நடத்தப்பட்டு ஆருத்ரா தரிசனம் விழா நடத்தப்படும். அனைத்து சிவ ஆலயங்களிலும் இந்தவிழா கோலாகலமாக கொண்டாடப்படும் என்றாலும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு  டிசம்பர்   27ம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படும் என அம்மாவட்ட கலெக்டர்   அறிவித்துள்ளார். 

ஆருத்ரா


இது குறித்து கடலூர் மாவட்ட கலெக்டர் விடுத்த செய்திக்குறிப்பில் “ கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், சிதம்பரம் அருள்மிகு நடராஜர் திருக்கோவில்  டிசம்பர் 27ம் தேதி புதன்கிழமை  ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது. இந்நாளில்  கடலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும்  அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. 

உள்ளூர் விடுமுறை


இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில்  ஜனவரி மாதத்தில் விடுமுறை நாளான ஜனவரி 6ம் தேதி சனிக்கிழமை பணிநாளாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன்  உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படும் டிசம்பர்  27ம் தேதி  அவசர அலுவல்களை கவனிக்கும் பொது முக்கியத்துவம் வாய்ந்த அரசு அலுவலகங்கள்  குறைந்தபட்ச பணியாளர்களோடு செயல்படும் ”என அறிவிக்கப்பட்டுள்ளது.  

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!