நவம்பர் 24ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை...!!

தமிழகத்தில் அரசு அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகளுக்கு பொதுவிடுமுறை தவிர்த்து உள்ளூர் திருவிழாக்கள் பண்டிகைகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதுண்டு. பண்டிகைகளின் போது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த விடுமுறை மாவட்ட கலெக்டர் அறிவிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது முத்துப்பேட்டை ஜாம்புவானோடை தர்ஹா. இங்கு சந்தனக்கூடு திருவிழா நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு நவம்பர் 24ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முத்துபேட்டையில் அமைந்துள்ளது தாவூத் காம் தர்கா . இங்கு ஒலியுல்லாஹ் என்னும் இஸ்லாமிய சூபி அடக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் கந்தூரி விழா நடத்தப்பட்டு வருகிறது. ஜாம்புவானோடை தர்கா மஹான் செய்குதாவுது ஒலியுல்லாஹ் ஆண்டவரின் 722 ஆவது ஆண்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறும் கந்தூரி விழாவில் தினமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு நிகழ்ச்சி நவம்பர் 24ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கிறது . இந்நிகழ்வை காண வெளிநாடு மற்றும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொள்வர். இதனை முன்னிட்டு நவம்பர் 24ம் தேதி திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்
ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்
சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!
கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!